அமிர்தம் - தி.ஜானகிராமன்
_________________________________
அமிர்தம்
(தி.ஜானகிராமன்)
___________________________________
தி.ஜா அவர்களின் முதல் புதினம் இது.1944 ஆம் ஆண்டு "கிராம ஊழியன் "இதழில் தொடராக வெளிவந்தது.1948 இல் நூல் வடிவம் பெற்றது.
பிந்தய புதினங்களில் வெளிப்படும் கலை நுட்பங்களின் ஆரம்பச் சாயல்களைக் கொண்டது - ஆண் பெண் உறவில் சக மதிப்பு - பரஸ்பர விழைவு - பெண்ணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான தோழமை என்ற உறவுநிலை சித்தரிப்புகளைக் கொண்டது.
தஞ்சை வட்டார மொழி, கிராமப் பின்னணியில் இயற்கையின் மானுடத் தோற்றம் என்று பின் எழுதிய புதினங்களில் வெளிப்பட்ட இயல்புகளின் மூல உதாரணங்களை அமிர்தத்தில் காணலாம்.
சொல்லும் மொழியில் பழமையானதாக இருந்தாலும் பேசும் மொழியில் புதிதாகத் தொனிக்கும் புதினம் இது.
(விலை : ரூ 200)
(காலச்சுவடு பதிப்பகம்)
Comments
Post a Comment