மாவீரர் மருதுபாண்டியர் - எஸ்.எம்.கமால்
_______________________________
மாவீரர் மருதுபாண்டியர்
(எஸ்.எம்.கமால்)
________________________________
கி.பி 1780 முதல் 1801 வரை சிவகங்கைச் சீமையில் பிரதானியாக இருந்து பரங்கியரோடு போரிட்டு வீரமரணம் அடைந்த மருது சகோதர்களது வாழ்வினை, கிடைத்த சான்றுகளின் அடிப்படையில் கோர்வையாக எழுதியுள்ளார் ஆசிரியர்.
இராமநாதபுர சேதுபதிகளோடு முரண்பட்ட நிலை, பரங்கியரோடு பணிந்தும் எதிர்த்தும் நின்ற நிலைகள் என மருது சகோதரர்களின் அரசியல் நிலைகள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.
ஆற்றொழுக்கு நடையில் எழுதப்பட்ட ஒரு வட்டார வரலாறு படிப்பவர்களுக்கு மனநிறைவை ஏற்படுத்தும்.
(திருவள்ளுவர் பதிப்பகம்)
Comments
Post a Comment