வெள்ளை யானை - ஜெயமோகன்
__________________________________
வெள்ளை யானை
(ஜெயமோகன்)
__________________________________
வெள்ளையர்களின் ஆட்சி காலத்தில் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு பெரிய பெரிய பாளங்களாகக் கொண்டுவரப்பட்ட ஐஸ்கட்டிகளே வெள்ளை யானைகளாக இப்புதினம் முழுவதும் உருவகப் படுத்தப்பட்டுள்ளது.
தங்களோடு பணியாற்றிய ஒரு தொழிலாளியும். அவன் மனைவியும் அமெரிக்க நிறுவன கங்காணிகளால் கொல்லப்பட ..அதை எதிர்த்து வேலை நிறுத்தம் (1878) செய்கிறார்கள் தொழிலாளர்கள். சென்னை ஐஸ்ஹவுசில் நடந்த இந்த போராட்டம்தான் இந்தியாவின் முதல் வேலை நிறுத்தம் என்கிறார் ஆசிரியர்.
இருவர் கொல்லப்பட்டதை விசாரிக்க ஆரம்பிக்கிறார் அயர்லாந்திலிருந்து இந்தியா வந்த காவல்துறை அதிகாரி "எய்டன் " ..
அவருடைய பார்வையில் அக்கால கட்டமும், சூழலும், மக்களின் வாழ்க்கையும் அவருடைய மனவோட்டங்களாக விரிகிறது..புதினம் முழுவதும்.
ஐஸ்ஹவுசில் வேலை பார்க்கும் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியை தட்டிக் கேட்க முனைகிறார் எய்டன். அவருக்கு ஓரளவு படிப்பறிவும், பட்டறிவும் கொண்ட இளைஞன் காத்தவராயன் உதவுகிறான்.போராட்டம் ஒடுக்கப்படுகிறது..
(விலை : ரூ 400)
(எழுத்து பிரசுரம்)
Comments
Post a Comment