கதை கேட்கும் சுவர்கள்(ஷாபு கிளித்தட்டில்)தமிழில்...கே.வி.ஷைலஜா
_______________________________
கதை கேட்கும் சுவர்கள்
(ஷாபு கிளித்தட்டில்)
தமிழில்...கே.வி.ஷைலஜா
________________________________
இந்தப் புத்தகத்தில் வரும் பெண்களை எல்லோரும் அவசியம் வாசிக்க வேண்டும்.
25 ஆயிரம் ரூபாய்க்கு தன் மகளை விற்கத் துணிந்த அம்மாவிலிருந்து..ஒரு கடிதம் மூலம் அச்சிறுமியை அழைத்துப் பேசிய அன்னை தெரசா வரை.. அன்பு - வெறுப்பு - ஆசை - வெறுப்பு - கருணை என வாழ்க்கையை வடித்தெடுத்தப் பெண்களை அறியலாம்.
பெண்ணின் வாழ்க்கையை திசை மாற்றுவதில், ஆண்களைவிட பெண்ணின் பங்கே அதிகம்.
பிரேமன் என்ற மனிதன்.ஒரு பெண்ணை பொருளாக பாவிக்கின்ற அற்ப மனம். எல்லா துன்பங்களையும் தாங்கிக் கொண்டு இருந்த அச்சிறு பெண்ணின்(உமா) அன்பு அவரை ஒன்றும் செய்யாமலா இருக்கும்.
ஆழ்மனதின் குற்ற உணர்வால் மருத்துவமனையில் இருந்த போது அவர் செய்த செயல் மனிதாபிமானது.
மற்றவர்களின் வாழ்விலிருந்து பாடம் கற்றுக்கொள்ள நினைப்பவர்களுக்கு இந்நூல் பல செய்திகளைச் சொல்லும்.
(விலை : ரூ 400)
(வம்சி புக்ஸ்)
Comments
Post a Comment