காலந்தோறும் பெண் - ராஜம் கிருஷ்ணன்
______________________________
காலந்தோறும் பெண்
(ராஜம் கிருஷ்ணன்)
_______________________________
பெண்ணியம் பேசும் பல நூல்கள் இக்காலகட்டத்தில் வெளிவந்தாலும், ஒரு பெண் ..பெண் அனுபவிக்கும் இன்னல்களை அலசி ஆராய்ந்து எழுதியுள்ள விதம் அருமையுடையது.
பெண்கள் என்றால் குடும்பக்கதை எழுத வேண்டும் என்ற படிமத்தை உடைத்து, சமூகத்தில் அல்லறும் மக்களைப் பற்றி எழுத, அவர்கள் வாழும் பகுதிக்குச் சென்று களப்பணியாற்றி கதை எழுதுபவர்.
இந்நூலில் "பெண்ணுக்கு மட்டும் "சிறகா? பொன் கூண்டா? "
"வருண பேதங்கள் " "விழிமின்! எழுமின் "உள்பட 26 கட்டுரைகள் உள்ளன.
சங்ககாலம் முதல் மரபு வழியாக பின்பற்றப்பட்டு வந்த பெண் பற்றிய சிந்தனைகளை ..செயல்பாடுகளை.. ஆய்வுக் கட்டுரைகளாக தந்துள்ளார் ஆசிரியர்.
இக்கட்டுரைகள் பெண்களின் வளர்ச்சியை.. வாழ்க்கை விடியலை எண்ணி எழுதப்பட்டது..
(விலை : ரூ 80)
(நாம் தமிழர் பதிப்பகம்)
Comments
Post a Comment