என்பிலதனை வெயில் காயும்(நாஞ்சில் நாடன்)
______________________________
என்பிலதனை வெயில் காயும்
(நாஞ்சில் நாடன்)
_______________________________
படிக்கப் படிக்க அதன் போக்கிலேயே ரசிக்க வைக்கும் நூல்.
புத்தகம் முழுக்க சுவாரஸ்யங்கள் ஒரு செயற்கை தன்மையற்ற இயல்பான மொழியில்.. இயற்கையாக அமைந்துள்ள எழுத்து நடை .. புத்தகத்தின் பலம் ... படிக்கும்போதே காட்சிகள் கண்முன் விரியும்..
புதினத்தின் பக்கங்கள் முழுவதும் கிராமத்து வளங்கள் செழித்துக் கிடக்கின்றன.ஆயினும் வறுமை என்னும் கொடுமை மெல்லிய நூழிலைகளால் பின்னப்பட்ட சிலந்தியின் வலைபோல் கதை முழுவதிலும் பிணைந்து கிடக்கின்றன.
புதுப்புது புத்தகங்கள் எண்ணிலடங்கா வந்து கொண்டிருக்கும் இக்காலக் கட்டத்தில் நாம் படிக்காமல் விட்ட இது போன்ற நல்ல நூல்களைத் தேடிப் படிக்கையில் கால எந்திரத்தில் பயணித்துப் பின்னோக்கிச் செல்வது போன்ற ஒரு உணர்வு கண்டிப்பாக ஏற்படும்..
(விலை : ரூ 120)
(விஜயா பதிப்பகம்)
Comments
Post a Comment