தமிழாற்றுப்படை(கவிப்பேரரசு வைரமுத்து)

_______________________________
தமிழாற்றுப்படை
(கவிப்பேரரசு வைரமுத்து)
_______________________________
       இந்த நூற்றாண்டில் தமிழர்களுக்கு கிடைத்திருக்கும் காலக் கருவூலம்!
மூவாயிரம் ஆண்டுகளின் தமிழை ஒரே நூலுக்குள் அடைத்துக் காட்டும் சாகசம்! 
       இப்புத்தகத்தைப் படித்து முடிக்கும் போது தொல்காப்பியர், கபிலர், அவ்வையார், திருவள்ளுவர், இளங்கோவடிகள், அப்பர், ஆண்டாள், வள்ளலார், பாரதியார், பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்ட 24 ஆளுமைகள் மொத்தமாக நம் வீட்டிற்கு விருந்துக்கு வந்து சென்றது போல் உணர்வு ஏற்படும்!
        ஒரு நல்ல நீதிபதியின் நேர்மையோடும், ஒரு விஞ்ஞானியின் பார்வையோடும், தர்க்க ஞானத்தின் கூர்மையோடும், ஒளி கொண்ட சொற்களால், வனப்பு மிகுந்த வாக்கியங்களால் எழுதப்பட்டிருக்கும் நூல் இது! 
       திராவிடத் தொன்மை, தமிழின் தத்துவ மரபு, படைப்பாளிகளின் சமூக அக்கறை குறித்து ஆய்ந்து எழுதப்பட்ட கட்டுரைகளால் தமிழர்களின் உயரம் கூடுகிறது! 
        தமிழுக்கு வரும் ஆபத்தை எதிர்த்து வெல்லும் வாள் இந்நூல்!
தமிழர்களின் படை!
தமிழுக்குக் கொடை!!
தமிழாற்றுப்படை!!! 
           (திருமகள் நிலையம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்