ஆகாயத்தாமரை(அசோகமித்திரன்)
_______________________________
ஆகாயத்தாமரை
(அசோகமித்திரன்)
_______________________________
இரகுநாதன் என்னும் இளைஞனின் வாழ்வில் ஓரிரு நாட்களில் நடக்கும் சில நிகழ்வுகள் ஆகாயத்தாமரையாக விரிகிறது!
இரகுநாதனின் செயல்களை, உணர்வுகள் அவனை பாதிக்கும் நிகழ்வுகளை, அவன் சிக்கிக் கொள்ளும் நெருக்கடிகளின் தன்மைகளை, அவனுக்குக் கிடைக்கும் எதிர்பாராத உதவிகளை, அவற்றை அவன் எதிர்கொள்ளும் விதங்களை நுணுக்கமாகச் சித்தரிக்கிறார் ஆசிரியர்!
இந்தச் சித்தரிப்புகளில் குடும்ப உறவுகள், சமூக உறவுகள், அலுவலக நடைமுறைகள் எனப் பல அம்சங்கள் விளங்குகின்றன!
வாழ்வில் அவரவர் பாதையை அவரவர்களே பார்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்தவர் உதவியை எதிர்பார்ப்பது ஏமாற்றத்தைக் கொடுக்கும் என்னும் கருத்தை சிந்திக்க வைக்கும் புதினம்.
ஆகாயத்தாமரை என்னும் கற்பனையை, மானுடக் கனவுகளின் குறியீடாக உருவகிக்கும் இப்புதினம், இந்தக் குறியீட்டின் பின்புலத்தில் வாழ்வின் எதார்த்தத்தைக் காட்டுகிறது!
அசோகமித்திரனின் அற்புதப் படைப்பு!
(விலை : ரூ 140)
(நற்றிணை பதிப்பகம்)
Comments
Post a Comment