நெல்சன் மண்டேலா(தா.பாண்டியன்)
_________________________
நெல்சன் மண்டேலா
(தா.பாண்டியன்)
_________________________
தேச விடுதலைக்காக 27ஆண்டுகள் சிறையில் வாழ்ந்த சிறப்பும், அடுத்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் பதவியைத் துறந்த சிறப்பும் நெல்சன் மண்டேலாவுக்கு உண்டு.
வாழ்க்கை வரலாறு நாட்குறிப்புகளின் தொகுப்பு அன்று.அனுபவங்களின் பதிவு!
மண்டேலாவின் வாழ்க்கை நிகழ்வுகள், மனப்போராட்டங்கள், தீர்வுகளை எதிர்நோக்கிய பதட்டங்கள், ஆசைகள், கனவுகள், எதிர்பார்ப்புகள் போன்ற விலைமதிப்பற்ற பாடங்கள் மனித சமுதாயத்திற்குத் தம்முள் குவிந்து நிற்கும் பொருண்மை வாய்ந்தவை!
மண்டேலாவின் வாழ்க்கை வரலாறு ஒரு தனிமனிதனின் வரலாறன்று! மனித சமுதாயத்தில் நிறம் கடந்து நின்று எதிர்த்துப் போராடி வென்ற வரலாறு!
எளியநடையில் ஒரு வரலாற்று இலக்கியத்தைப் படைத்திருக்கிறார் தோழர் தா.பாண்டியன் அவர்கள்! 📚
Comments
Post a Comment