மார்க்ஸையும் எங்கெல்ஸையும் பற்றிய நினைவுக் குறிப்புகள்

________________________________
மார்க்ஸையும் எங்கெல்ஸையும் பற்றிய நினைவுக் குறிப்புகள்
__________________________________
      இந்தத் தொகுப்பில் பாட்டாளி வர்க்கத்தின் மாபெரும் தலைவர்களும் ஆசான்களுமான காரல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கெல்ஸ் மற்றும் இவர்களது சமகாலத்தில் வாழ்ந்தவர்களது நினைவுக் குறிப்புகள் உள்ளன.
       இந்த நினைவுக்குறிப்புகளில் இருவரும் தலைச்சிறந்த புரட்சி வீரர்களாக, தொழிலாளி வர்க்கத்தின் லட்சியத்திற்கு வளைந்து கொடாது போராடும் போர்வீரர்களாக சிறந்து நிற்கிறார்கள்.
        இருவருக்கும் இடையே நிலவிய மகத்தான நட்பு, விஞ்ஞானத் துறையிலும், புரட்சிப் போராட்டத்திலும் அவர்கள் தொடந்து படைப்பாற்றல் அடிப்படையில் ஒத்துழைத்தது போன்றவற்றை இந்நூலில் விரிவாகச் சித்தரித்துள்ளனர்.
       இந்நூலில் மார்க்ஸையும் எங்கெல்ஸையும் சிந்தனையாளர்கள், மேதைகள், புரட்சியாளர்கள் என்று மட்டுமில்லாமல் ..மிகமிக அழகான பெருமை தரும் மனிதப் பண்புகளின் (ஒழுக்கம், அடக்கம், எளிமை, வாய்மை, வெல்ல முடியாத வெற்றி உணர்வு) இவற்றின் உருவகங்களாகக் காணலாம்.
             (புரோகிரஸ் பதிப்பகம்)
                        (மாஸ்கோ)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்