செம்பருத்தி(தி.ஜானகிராமன்)
__________________________________
செம்பருத்தி
(தி.ஜானகிராமன்)
___________________________________
தி.ஜா வின் நாவல் வரிசையில் ஆண், பெண் உறவு சிக்கல்களை நுணுக்கமாக அணுகும் மற்றொரு படைப்பு "செம்பருத்தி "...
மற்ற புதினங்களைவிட மன விசாரங்களும், தத்துவ விசாரங்களும் சற்று அதிகமாகவே அலசப்பட்டிருக்கின்றன.
பணத்தைவிட மனிதர்களைச் சம்பாதித்து, அவர்களின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாகி, அதை நிலைத்திருக்கச் செய்வதே மனிதனின் உண்மையான வெற்றி..
இந்நூலில் சட்டநாதனும் இவ்வகைதான்..
பெண்கள் நிரம்பிய அவனது உலத்தில் அவர்களூடே பயணித்து, புரிந்து கொள்ள முயலுவதும், அவன் கடந்துவரும் மூன்று பெண்கள் அவனது வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்புகளுமே இப்புதினம்..
சரளமான நடை, உரையாடல் மூலம் கதையை நகர்த்தும் உத்தி, கதை முடிச்சை சொற்களில் பொதிந்து தரும் லாவகம் என தி.ஜா முத்திரையை அழுத்தப் பதித்து இந்நூலை ஆக்கியுள்ளார்..
(விலை : ரூ 220)
(ஐந்திணை பதிப்பகம்)
Comments
Post a Comment