நந்நவனத்து நட்சத்திரங்கள் - பா.விஜய்
____________________________
நந்நவனத்து நட்சத்திரங்கள்
(பா.விஜய்)
_____________________________
காதல் ஜபங்கள் தொடங்கி கற்றுக் கொள்! ஈறாக சுமார் 26 புதுக் கவிதைகளின் தொகுப்பு இந்நூல்.
"என் கிராமம் " கவிதை .. வாசிக்கும் ஒவ்வொருக்கும் பால்ய கால நினைவுகள் தம் நினைவடுக்குகளில் தோன்றி மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
விவசாயி விடுதியில் தங்கியுள்ள தன் மகனுக்கு எழுதிய கடிதமாக (விதை விழுந்த இடம்) கவிதை, கண்ணில் நீரை வரவிக்கும்.
தற்கொலையின் விளிம்பில் நிற்பவனைப் பார்த்து சொல்லப்பட்ட (விதையில் இருக்கிறது விருட்ஷம்) கவிதை அருமை..
"தங்கத்திற்குத் தரப்படும்
மதிப்பு தனக்கில்லையென்று
இரும்பு இளைத்துப் போவதில்லை "
"நீ பூக்களின் மேல்
நடக்க ஆசைப்பட்டால்
கண்ணாடியின் மேல் நடக்க
உன்னுடைய கால்கள்
தயாராகட்டும் "
எல்லா கவிதைகளும் படித்து
சிந்திக்கத்தக்கவை.. போற்றத்தக்கவை..
(விலை : ரூ 100)
(குமரன் பதிப்பகம்)
Comments
Post a Comment