காவி நிறத்தில் ஒரு காதல்(வைரமுத்து)

________________________
காவி நிறத்தில் ஒரு காதல்
(வைரமுத்து)
_________________________
      இம் மண்ணில் தற்போது மாறி வரும் மனித மதிப்பீடுகள், பண்பாட்டு மாற்றங்கள், வீழ்ச்சிகள், நாகரிகத்தின் நசிவுகள், சமூக வாழ்வை ஊடுருவிக் கிழிக்கும் அரசியல் முதலியவற்றைப் பற்றி பேசும் நூல்!
     சமூக வாழ்விலிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டு அடர்ந்த வனாந்தரத்தில் வாசமிருந்த ஒரு சாமியார் பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு சராசரி வாழ்வோடு சங்கமிக்க வருகிறார்!
    அவரை ஒரு யாத்திரைக்கு ஆளாக்கி, சமூகத்தின் உட்பரப்புகளில் ஊடுருவ விட்டு, உலகியல் மாறுதல்களை உணர்த்திக் கொண்டே இருக்கிறார் ஆசிரியர்!
     மனிதர்கள் முகங்களால் வேறுபட்டிருப்பது மாதிரியே எண்ணங்களாலும் வேறுபட்டிருக்கிறார்கள்!
     அந்த எண்ண வேறுபாடுகளை எழுத்துத் தராசில் நிறுத்துப்பார்க்க முயன்றிருக்கிறார் கவிப்பேரரசு! 📚
     (திருமகள் நிலையம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்