துயில்(எஸ். இராமகிருஷ்ணன்)

_______________________________
துயில்
(எஸ். இராமகிருஷ்ணன்)
________________________________
     உடம்பின் நோய்களுக்கும் மீட்சிக்கும் நடுவே மனிதமனம் கொள்ளும் எண்ணற்ற விசித்திரங்கள் தான் மகத்தான தரிசனங்களை உருவாக்குகின்றன.
     நம்மைக் காலங்காலமாகத் தொடர்ந்து வரும் குற்ற உணர்வின் நதியிலிருந்து கரையேறாத வரை, பிணியால் வரும் துயரினை ஒருபோதும் நம்மால் கடக்கவே முடியாது என்ற மகத்தான உண்மைதனை "துயில் "ஆழமாகச் சொல்கிறது.
        இந்திய பாரம்பரிய மற்றும் மேல்நாட்டு சிகிட்சை முறைகள், 
நோய்கள், அது சார்ந்த மூட நம்பிக்கைகள், நோய் வந்த பிறகு உறவினர்களின் உதாசீனத்தால் ஏற்படும் மன உளைச்சல், தனிமைத் துன்பம் முதலியவற்றை காட்சிப்பூர்வமான தத்துவார்த்தத்தில், கவித்துவம் நிறைந்த இப்புதினத்தை அவசியம் அனைவரும் படிக்க வேண்டும்.
வாசிப்பை நேசிப்பவர்களையும், சுவாசிப்பவர்களையும் 
யோசிக்க வைக்கும் நூல் இது.
            (விலை : ரூ 525) 
            (தேசாந்திரி பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்