வடிவுடை மாணிக்க மாலை(வள்ளலார்)பதிப்பாசிரியர்..வ. ஞானப்பிரகாசம்

________________________________
வடிவுடை மாணிக்க மாலை
(வள்ளலார்)
பதிப்பாசிரியர்..வ. ஞானப்பிரகாசம்
__________________________________
      திருவொற்றியூர் தொண்டை நாட்டு சிவத்தலங்களுள் ஒன்று.தேவார ஆசிரியர்கள் மூவராலும் பாடப் பெற்றது.
     வள்ளற் பெருமான் இளமையில் 
சென்னையில் இருந்த காலத்தில் 12 ஆம் வயது தொடங்கி 35 ஆம் வயது வரை , 23 ஆண்டுகள் நாளும் திருவொற்றியூர் சென்று வடிவுடையம்மனை வழிபட்டுப் பல பாமாலைகள் பாடி பரவசமடைந்தார்.
       அவர் பாடி அணிவித்த பாமாலையே "வடிவுடை மாணிக்க மாலை ".ஒவ்வொரு பாடலும் "வடிவுடை மாணிக்கமே "என முடியும். திருவருட்பா இரண்டாம் திருமுறையில் 75 ஆம் தலைப்பாக அமைந்துள்ளது.
      காப்பு செய்யுளும் பின் 101 பாடலுமாக கட்டளைக் கலித்துறை யாப்பில் அமைந்த நூல் இது.

"கடல்அமுதே! செங்கரும்பே! அருள்கற்பகக் கனியே!
உடல் உயிரே! உயிருக்குள் உணர்வே! உணர்வுக்குள் ஒளியே!
அடல் விடையார் ஒற்றியார் இடங்கொண்ட அருமருந்தே!
மடல்அவிழ் ஞானமலரே! வடிவுடை மாணிக்கமே!
                (விலை : ரூ 20)
    (அருள் வடிவேலன் பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்