நெய் பாயாசம் - வைக்கம் முகமது பஷீர்எஸ்.கே.பொற்றெக்காட்மாதவிக்குட்டிதமிழில்...சுரா

____________________________
நெய் பாயாசம்
____________________________
வைக்கம் முகமது பஷீர்
எஸ்.கே.பொற்றெக்காட்
மாதவிக்குட்டி
தமிழில்...சுரா
_____________________________
         மேற்கண்ட மூன்று ஆசிரியர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட 18 சிறுகதைகளின் தொகுப்பு.சுரா அவர்கள் 2014 மொழி பெயர்த்துள்ளார்.
     பஷீரின் "நூறு ரூபாய் நோட்டு "
"நெய் திருட்டு " "யானைத்திருடன் " உள்பட 13 கதைகள். பஷீர் அவர்களின் இளைமைப்பருவ வாழ்வியலுடன் தொடர்புடையவையாகவே அமைந்துள்ளது.கேலி கிண்டலுடன் எதார்த்தமானக் கதைகள்.
       பொற்றெக்காட் அவர்களின் "ப்ரதின் ஆவி ""யமுனைக் கரையில் " "என் பம்பாய் நண்பர்கள்" என 3 கதைகள்.இவர் காட்சிப்படுத்தும் நபர்கள் ஒவ்வொருவரும் தனித்தன்மை மிக்கவர்களே.
"பிரதீன் ஆவி " எழுப்பும் வினாக்கள் சிந்தித்து சிந்தனையை உறைய வைப்பவை.
       மாதவிக்குட்டியின் "நெய்ப் பாயாசம் " "மாட்டுச்சந்தை " கதைகள் இடம்பெற்றுள்ளன. நெய்ப்பாயாசம் சிறுகதை நெஞ்சைப் பிசைந்து, கண்ணீர் உண்டாக்கி ஒருவித பிரம்மையில் மூழ்கச் செய்யும் என்பதே உண்மை.
முதிர்கன்னியின் வரன் தேடும் சூழலை மிக நுட்பமாக சித்தரிக்கும் கதை "மாட்டுச்சந்தை "
                 (விலை : ரூ 60)
                 (நக்கீரன் வெளியீடு) 

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்