துயில் - எஸ்.ராமகிருஷ்ணன்
_______________________________
துயில்
(எஸ்.ராமகிருஷ்ணன்)
_________________________________
மனிதன் மிகவும் அஞ்சுவது நோய்களுக்குத் தான்.எல்லா நோயும் தனியே வருவதில்லை.கூடவே பயமும் நிச்சயமின்மையும் சேர்ந்தே வருகின்றன.
மனிதன் நோயின்மீது கொண்டிருக்கும் எண்ணத்தை அற்புதமாகச் சொல்வதுடன் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையை அழகாகச் சொல்லும் புதினம் இது.
இப்புதினத்தில் வரும் ஒவ்வொரு நோயாளியும்.. அவர்களின் கதைகளும் .. நமக்கான எச்சரிக்கைகள்.
கதாப்பாத்திரங்கள் சின்னராணி, செல்வி, ஏலன் பவர், அழகர் என்று பலர் நம்மில் ஒருவரே..
நோய்மையோடு தொடர்புடைய வரலாற்றை ..சமூக உளவியல் பார்வையில் தன் வசீகர மொழிநடையில் ஆவணப்படுத்தியுள்ளார் எஸ்.ரா அவர்கள்..
தத்துவார்த்தமான.. கவித்துவம் நிறைந்த நாவல்..
"துயில் " வாசிப்பவரை விழிப்படையச் செய்யும்..
(விலை : ரூ 500)
(தேசாந்திரி பதிப்பகம்)
Comments
Post a Comment