நான் அதுவல்ல - உஷாதீபன்
________________________________
நான் அதுவல்ல
(உஷாதீபன்)
________________________________
இப்புத்தகத்தில் 19 சிறுகதைகள் உள்ளன. நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் மனிதர்கள், குடும்பங்கள், அலுவலகம் இவற்றை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.
"தன்னில் கரைந்தவர் " அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெறவுள்ள தொழிற்சங்கவாதியின் கதை.
"கல்லை மட்டும் கண்டால் " புத்தக வாசிப்பில் வாசிப்பு அனுபவமிக்க ஒரு முதியவர் மூலம் சொல்லும் கதை.தான் சேர்த்து வைத்துள்ள புத்தகங்களை பழைய பேப்பர் கடைக்குப் போட்டுவிடக்கூடாது என்று புத்தக மூட்டையைச் சுமந்து சென்று நூலகத்தில் ஒப்படைக்கும் அவர் புத்தகங்களைப் பற்றி பேசுதல் அருமை.
காவல்,பிரகரதி,வெள்ளாடு எல்லா கதைகளுமே அருமை. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதத்தில் உள்ளத்தைத் தொடும்.
(விலை : ரூ 150)
(நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)
Comments
Post a Comment