சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கம் - உமா பாலகுமார்
_________________________________
சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கம்
(உமா பாலகுமார்)
_________________________________
உமா பாலகுமார் அவர்கள் சதுரகிரி மலைக்குச் சென்று சிவனை வழிபட்டு வந்த அனுபவங்களே இந்நூல்.
இந்நூலை வாசிக்கும் போது நாமும் அவருடன் சென்று, ஈசனை வணங்குவது போன்ற உணர்வு ஏற்படும்.
சதுரகிரி மலை அடிவாரத்திலிருந்து மலை ஏறுதல் - அத்திரி மகரிஷி வனம் - கோரக்கர் குகை - இரட்டை லிங்கம் சந்நிதி - நாவல் ஊற்று - என்று நாமும் அவருடன் மலைக்குச் செல்கிறோம். இறைவனை பார்த்து வணங்கி வருகிறோம்.
ஆசிரியரின் கவித்துவமான நடையழகும், வாசிக்கும் போது மனம் ஒருநிலைப்பட்டு இறைவன் திருவடி வணங்குதலும் நூலின் வெற்றி..
ஆத்மார்த்தமான பக்தியுடன் நேசித்து, தன்னை உணர வேண்டும் என்று வேண்டுபவருக்கு தன்னை உணர்த்துகிறார் அந்த "ருத்ரன் "..
"அன்பெனும் பிடியில் அகப்படும் மாமலையே ..." என்று அடியார்கள் பாடியது இதைத் தானோ?
(விலை : ரூ 100)
(அருண் பதிப்பகம்)
Comments
Post a Comment