கோட்டைப்புரத்து வீடு - இந்திரா சௌந்தரராஜன்

________________________________
கோட்டைப்புரத்து வீடு
(இந்திரா சௌர்தரராஜன்)
_________________________________
       ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்தது.
       மதுரைப்பக்கம் ஜமீன் கோட்டைபுரம். அந்த ஜமீன் வாரிசுகள் 30 வயது நிறைவில் மர்மமாக இறக்கிறார்கள்.
     அதன் கடைசி வாரிசு விசு ..அவன் காதலி அர்ச்சனா..இருவரும் இந்த மர்மத்தைத் தோண்டுகிறார்கள்.
     ஜமீனின் வாரிசுகளைக் கொன்று குவிக்கும் ஒருவனின் வன்மத்திற்குக் காரணம்? ..ஜமீன் அடிமைப் பெண்களை இழிவு படுத்துவதும், ஆங்கிலேய துரைகளுடன் சேர்ந்து கொட்டமடிப்பதும் தான்.
      கதை விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை.அந்தக் கால அடிமை முறை, சவ அடக்கம், ஜமீன்களின் நடைமுறை இவற்றை அறியலாம்.
அர்ச்சனா கதையின் ஹீரோ..
       பெரியராணி பாண்டியம்மாள், சின்ன ராணி தில்லை நாயகம், ரத்னாவழி, விருச்சிகமணி கதாப்பாத்திரங்களே நம்மை கதைக்குள் மூழ்கடிக்கும்..
      ஆசிரியர் அவர் பாணியில் கதையை முடிக்கிறார்.அப்போது நமக்குள் எழும் அதிர்ச்சிகளே.. இப்புதினத்தின் வெற்றி..
கோட்டைப்புரத்து வீடு மர்மங்கள் நிறைந்தது.மனதைக் கவர்வது.
                 (விலை : ரூ 110)
                 (வானதி பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்