தூர்வை - சோ.தர்மன்
______________________________
தூர்வை
(சோ.தர்மன்)
_______________________________
இப்புதினத்தை வாசிக்கும் போதே அந்தக் கதைக்களத்தின் கரிசல் காட்டின் வெம்மையும், நீர்மையும் நம்மேல் ஒட்டிக் கொள்ளும்.
கரிசல்பூமி கந்தக பூமியானக் கதை. விவசாயத்தை விட்டுவிட்டு, சம்சாரி தீப்பெட்டித் தொழிற்சாலையின் காவலாளியாய் போனதை இயல்பாய்.. அழகாய்..காட்டோடை போல சிலுசிலுத்து நம்மை ஈர்க்கும் கதை.
கதையைப் படித்து நெடுநாள் ஆனாலும் மினுத்தான் - மாடத்தி தம்பதியர் நம் மனதில் என்றும் நிற்பார்கள்.
விவசாய குடும்பங்கள் மடத்தில் கதையளப்பது.. சிலம்பம் பழகுவது.. கும்மியாடுவது.. அதையும் தாண்டி நேர்த்திக்கடன் தீர்க்க வண்டிகட்டி குடும்பம் குடும்மாகப் போவது .. இதையெல்லாம் வாசிக்கும் போது காலம் மாறிப்போனதை எண்ணி மனம் ஏங்கும்.
வாசிக்க வாசிக்க கரும்புச்சாறு போல் ஈர்க்கும்.
சொல்நடை வியக்க வைக்கும்..
(விலை : ரூ 230)
(அடையாளம் பதிப்பகம்)
Comments
Post a Comment