வைரமுத்து சிறுகதைகள்

_________________________
வைரமுத்து சிறுகதைகள்
_________________________
    ஒரே பத்திரிகையில் ஒரே ஆசிரியர் 40 வாரங்கள் தொடர்ந்து சிறுகதைகள் எழுதியது இதுவே முதல்முறை!
      வெளிவந்து கொண்டிருக்கும் போதே இதில் சில கதைகள்,  தன்னாட்சிக் கல்லூரிகளில் பாடங்களாக இடம் பெற்றிருக்கின்றன!
     கவிஞரினின் முதல் சிறுகதைத் தொகுப்பு!
     இதில் பல பிரச்சனைகளும், கௌரவக் கொலைகள் என்று தப்பாக உச்சரிக்கப்படும் காதல் கொலைகள் முதல் இலங்கைப் படுகொலை வரை பேசப் படுகிறது!
       சாதாரணச் சொற்கள், எதார்த்தமான விவரிப்பு, போகிற போக்கில் நினைத்துப் பார்க்க முடியாத காட்சிப்படுத்துதல், புது சொல்லாக்கம், படிப்போரின் மனதை கைப்பிடித்து அழைத்துச்செல்லும் திறன்,கதையின் முடிவில் நீக்க முடியாத கறையைப்போல படியும் சோகம் ..என்றாலும்,
அழகான மகிழம்பூ கோர்த்தது போல் இணைக்கிறார் கவிப்பேரரசு!
காலத்தை வெல்லும் காவியம் இந்நூல்! 📚
             (விலை : ரூ 300)
             (திருமகள் பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்