நிலம் பூத்து மலர்ந்த நாள்(மனோஜ் குரூர்)தமிழிர்...கே.வி.ஜெயஸ்ரீ

__________________________________
நிலம் பூத்து மலர்ந்த நாள்
(மனோஜ் குரூர்)
தமிழிர்...கே.வி.ஜெயஸ்ரீ
_____________________________________
         தலைப்பு மிகவும் வசீகரமானது. கதை நடக்கும் காலம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. கடந்த காலத்தை ஊடறுத்து, அக்கால வாழ்வியலை உற்று நோக்குவது போல் உள்ளது.
        வறுமை களைய மன்னரைப் பாடி பரிசு பெற்று மகிழும் மக்களைப்பற்றி அகலப் பேசும் நூல் இது.
          பாணரையும், கூத்தரையும் கதை மாந்தர்களாகக் கொண்டு, களவொழுக்கம், கற்பொழுக்கம், பகல் குறி, இரவுக்குறி, உடன்போக்கு எனும் சம்பவங்களைக் கொண்டது.
           கொலும்பன், சித்திரை, மயிலன் என்னும் பிரதான கதாப்பாத்திரங்கள் மூலம் வேடர், உழவர், பரதவர் என்போரின் வாழ்க்கை நெறிகளையும், அவர்களின் பண்பாட்டுக் கூறுகளையும் பேசுகிறது இந்நூல்.
        பெரும் கதைமாந்தர்களாக கபிலர், பாணர், ஔவை நடமாடுவது...குறுநில மன்னர்கள் நன்னன், பாரி, அதியமான், மூவேந்தர்கள் களமாடுவது .. விறுவிறுப்பான மர்ம முடிச்சுகள் கொண்ட வாசிப்பு அனுபவம் தரும்..
      பொதுவில் மனோஜ் குரூர், மலையாளம் மூலமாக தமிழுக்குச் செய்த கொடை.. அக்கொடையினை ஜெயஸ்ரீ அவர்கள் அப்படியே தமிழில் கொணர்ந்துள்ளார்.
                    (விலை : ரூ 300)
                    (வம்சி புக்ஸ்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்