கொட்டு மேளம்(தி.ஜானகிராமன்)
_________________________________
கொட்டு மேளம்
(தி.ஜானகிராமன்)
__________________________________
கொட்டு மேளம், சண்பகப் பூ, பசி ஆறிற்று, தவம், சிலிர்ப்பு, இக்கரை பச்சை உள்பட 12 சிறுகதைகள் கொண்ட நூல் இது.
தி.ஜா வின் அநாயாசமாய்த் துள்ளியோடும் நடை அனைவரையும் கவரும். கொட்டி மேளத்துடன் தொடங்கும் இக்கதைக்கோவை, சொர்ணாம்பாளுக்காகத் தவங்கிடக்கும் மனித இதயத்தின் தடைபடாத உணர்ச்சி சூழலில் நம்மை ஆழ்த்தும்.
வாசிப்பவர் அனைவரும் "செண்பகப் பூ " வை மனக் கண்ணிலிருந்து அகற்ற வழி தெரியாது திண்டாடுவர்.
பார்வதியின் கணவன் டாக்டர் அத்து, எம்டன் பயல் இவர்களெல்லாம் நாம் ஏற்கனவே சந்தித்தவர்களாகவே இருக்கின்றனர்.
மனிதனின் வீழ்ச்சியையும், பிறழ்வையும், தத்தளிப்பையும் அனுதாபத்துடன் பார்த்து வரையப்பட்ட ஓவியம்
"கொட்டு மேளம் "...
(விலை : ரூ 150)
(காலச்சுவடு பதிப்பகம்)
Comments
Post a Comment