பணம் - பெண் - பாசம்(ஜாவர் சீதாராமன்)
______________________________
பணம் - பெண் - பாசம்
(ஜாவர் சீதாராமன்)
_______________________________
வாழ்வில் தயவு தாட்சண்யத்திற்கு இடமில்லை என்ற எண்ணத்துடன், செல்வம் மேல் செல்வம் குவிக்கும், தன் மகள் மேல் உயிரையே வைத்திருக்கும் தொழிலதிபர் "சக்ரபாணி ".
இளமையில், போலீசுக்கு பயந்து ரயிலில் விழவிருந்த சக்ரபாணிக்கு தன் நிலத்தை விற்று தொழில் தொடங்க பணம் கொடுத்து உதவினார் "லால்குடி சீனிவாசன் ".
அவருக்குத் துன்பம் வரும்போது காப்பாற்ற மறுத்துவிட்டான் சக்ரபாணி. அவன் மகனுக்கும் உதவவில்லை.
இதையெல்லாம் தன் தாய்வழி தாத்தா மூலம் அறிந்த
"பாலா" (சக்ரபாணியின் மகள்) குருமூர்த்தியின் குடும்பத்திற்கு, தான் யார் என்று சொல்லாமலே, அவர்கள் வீட்டிற்குச் சென்று சேவகம் செய்கிறாள்.சீனிவாசன் மகள் திருமணத்திற்கு தன் தந்தைமூலம் பண உதவி செய்கிறாள்.அக்குடும்பமே வாழ்த்துகிறது. பாலா அத்தை மகன் மோகனை மணக்கிறாள்.சக்ரபாணி உலகில் பணத்தைவிட சிறப்பானது "அன்பு " தான் என்பதை உணர்கிறான்.
488 பக்கங்கள் உள்ள புத்தகம்.பக்கத்திற்கு பக்கம், ஏன் வரிக்கு வரி விறுவிறுப்பைத் தரும் புதினம் இது.
(விலை : ரூ 215)
(அல்லயன்ஸ் கம்பெனி)
Comments
Post a Comment