முருகன் அல்லது அழகு(திரு.வி.கல்யாணசுந்தரனார்)
________________________________
முருகன் அல்லது அழகு
(திரு.வி.கல்யாணசுந்தரனார்)
________________________________
திரு.வி.க மொழிமேடையில் வீசிய தென்றல்.. எழுத்துலகில் ஓர் இமயம்.. தொழிலாளர்கள் உலகில் அவர் ஒரு தொழிலாளி..
"முருகன் அல்லது அழகு " என்னும் இந்நூல்.. முருக வழிபாட்டில் கிளர்ச்சியையும் எழுச்சியையும் செய்த பெரு நூல். முருகு என்னும் சொல் மணம், இளமை. அழகு, கடவுள் தன்மை என முதன்முதலாக விளக்கப் பெறுகிறது. இயற்கையின் எழில் இறைவடிவாகக் காட்டப்பட்டுள்ளது.
தமிழர் கடவுட் கொள்கையை, வழிபாட்டு நெறியை, நன்மையை, தூய்மையை அழகோவியமாக்கியுள்ளார் திரு.வி.க அவர்கள்.
"முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழவைப்போன் " என்னும் திருவாக்கால் தமிழுக்கும் முருகனுக்கும் உள்ள இயைபு விளங்கும்.
(விலை : ரூ 30)
(மணிவாசகர் பதிப்பகம்)
Comments
Post a Comment