அடிமையின் காதல்(ரா.கி.ரங்கராஜன்)
_________________________________
அடிமையின் காதல்
(ரா.கி.ரங்கராஜன்)
__________________________________
வெள்ளைக்காரன் சென்னையில் குடியேறிய காலம் மிகவும் சுவாரசியமானது. அதற்கான தகவல்களை கன்னிமாரா நூல்நிலையத்தில் இக்கதைக்கு தகவல்களை திரட்டியுள்ளார் ஆசிரியர்..
கதைநாயகன் பெயர் "காஞ்சிபுரத்தான் " .இவர் வீட்டில் கோபித்துக் கொண்டு புறப்படும் வேளை தொட்டு, இந்திய ஆங்கிலேய உறவை.. கதையின் நடு அத்தியாயத்தில் வைத்து , காஞ்சிபுரத்தான் கதையைக் கொண்டு போய் கோட்டை வாசலில் முடித்திருப்பார் ரா.கி.ர அவர்கள்.
"மதராஸ் இப்படியும் இருந்ததா? " என வியக்க வைக்கும் நுண்ணிய பல சரித்திர தகவல்கள் ..
சாந்தோம் சர்ச் பக்கம் செல்லும் போதெல்லாம் தன் தோளில் வளர்ப்பு ஓணானுடன் மாலை வாக்கிங் செல்லும் ஆங்கிலப் பாதிரியார் நினைவுக்கு வருவார்..
ஒரு தலைமுறையை வியக்க வைக்கும் கதை
"அடிமையின் காதல் "..
(விலை : ரூ 205)
(வி.கே.புக்ஸ் இன்டர்நேஷனல்)
Comments
Post a Comment