மணல்வீடு(அநுத்தமா)
_________________________________
மணல்வீடு
(அநுத்தமா)
_________________________________
இன்றைய சமூகத்தில் இளம் விதவைகளின் நிலை "மணல்வீடு " போன்றதாக உள்ளது. (இக்கதை 1952 ல் எழுதப்பட்டது) எனினும், நிகழ்காலத்திற்கும் பொருத்தமாக இருப்பதே இந்நூலின் சிறப்பு.
அன்பெனும் நீர் சுரக்காவிடில் இக்கதை நாயகி விநோதா போல் நிறைய விநோதாக்கள் தோன்றத்தான் செய்வார்கள்.
இன்று அந்நிலை மாறினாலும், பல நூறு ஆண்டுகளாக உடம்பில் ஊறிவிட்ட மரபால் அவர்களை அன்போடும், ஆதரவுடன் அழைக்காமல் இவ்வுலகம் குறுகிய மனப்பான்மையுடன் சந்தேகக் கண்ணுடன் நோக்குகிறது.
கதை நாயகி "விநோதா " தைரியமாக, தன் கொள்கையில் நின்று, சத்தியத்திற்கு மட்டும் கட்டுப்பட்டு வெற்றி கண்டது போல, ஒவ்வொரு பெண்ணும் நிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதே எல்லோருடைய கனவாக இருக்கும்..
(விலை : ரூ 120)
(விபோ புக்ஸ்)
Comments
Post a Comment