ஒரு மனிதனின் கதை (சிவசங்கரி)
ஒரு மனிதனின் கதை
(சிவசங்கரி)
___________
விகடனில் தொடர்கதையாக வெளிவந்த கதை..குடிகாரர்களைப் பார்த்து, புரிந்து கொண்டதை .. உணர்ந்து கொண்டதை.. ஆசிரியர் இப்புத்தகத்தில் பகிர்ந்துள்ளார்.
"த்யாகு " குடிப்பழக்கத்திற்கு ஆளாகிறான்.அணுசரனை இல்லாத மனைவி (கங்கா). அன்பு காட்டாத அப்பா (சாமிநாதன்)..தாய், தங்கை மறைவு ..இதெல்லாம் அவனை பாதிக்கிறது. நண்பனின் உதவியால் சிகிச்சை பெறுகிறான். மீண்டும் குடிக்க ஆரம்பிக்கிறான்.
வேலை, குடும்பம், மரியாதை எல்லாவற்றையும் இழந்து, தற்கொலை செய்து கொள்ளப் போகும்போது, Alcoholics Aninymous அமைப்பைச் சேர்ந்த சிலரால் காப்பாற்றப்படுகிறான்.மீண்டும் வாழ்க்கையைத் தொடங்குகிறான்.
குடியின் அபாயத்தை ஒரு தலைமுறைக்கு விவரமாகச் சொன்ன புத்தகம். ரகுவரன் நடித்து தொலைக்காட்சி தொடராக வெளிவந்தது.
(விலை : ரூ 85) 2008 ல்..
(கங்கை புத்தக நிலையம்)
Comments
Post a Comment