வீரயுக நாயகன் வேள்பாரி (சு.வெங்கடேசன்)
வீரயுக நாயகன் வேள்பாரி
(சு.வெங்கடேசன்)
___________
தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்பு வழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ்நிலம் முழுவதும் பரவியது.
மூவேந்தர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர்.பறம்பின் நீர் வளம் அவர்கள் கண்களை உறுத்தியது.
பாரிக்கு எதிராக அவர்கள் தனித்தனியாக மேற்கொண்ட போர் முயற்சிகள் கைகூடவில்லை. அவர்கள் ஒன்றிணைந்து பாரியின் பறம்புமலையை, பல்வேறு பகுதிகளிலிருந்து தாக்கினர். என்றாலும் குறுநிலமன்னன் பாரியின் படைகள் மூவேந்தர் படைகளைச் சிதறடித்தது.
மூவேந்தரும் ஒன்றாய் சதி செய்து பாரியின் உயிரைப் பறித்தனர். வீரத்தால் சாதிக்க முடியாததை துரோகத்தால் சாதித்தனர்.
இயற்கைக்கும், மனிதனின் பேராசைக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தின் ஆதிவடிவம் வேள்பாரியின் கதை.
கதையை வாசிக்கும் போது திரும்பும் திசையெல்லாம் அருவி கொட்டும் குறிஞ்சி நிலத்தில்... அந்த அருவி நீரினும் குழுமை உடைய பாரியின் கரம் பற்றி நாமும் நடப்பதாக உணர்வோம்..
(விலை : ரூ 1500)
(விகடன் பிரசுரம்)
Comments
Post a Comment