தலைகீழ் விகிதங்கள்(நாஞ்சில் நாடன்)
______________________________
தலைகீழ் விகிதங்கள்
(நாஞ்சில் நாடன்)
_______________________________
ஒரு இளைஞனின் வாழ்க்கையை மகிழ்ச்சி, வறுமை, கோபம், துக்கம், அகங்காரம் என எத்தனை மனித உணர்ச்சிகள் உண்டோ அத்தனையையும் உள்ளது உள்ளபடி பேசுகிறது இந்நூல்.
வசதியானவன் வீட்டில் பெண்ணெடுத்தவன் படும்பாடும், சுயமரியாதைக்காக அவன் படும்பாடும் ..என ஒரு முழு வாழ்க்கையை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார் ஆசிரியர்.
மனித மனதின் வக்கிரங்களையும், எதிர்பார்ப்புகளையும், பிறர்படும் கஷ்டங்களைப் பார்த்து மற்றவர்கள் கொள்ளும் சந்தோசங்களையும் சாதாரண பார்வையாளராகப் பார்த்து நமக்குச் சொல்கிறார்.
கதை படிக்கும் நமக்கு பகீர் என்கிறது.
ஏனெனில் அந்தக் கதையில் வருபவர்கள் நம்மைப் போன்றவர்களே அன்றி வேறுயாருமல்லர்.
வாசிக்காதவர்கள் உடனே வாசியுங்கள். ஒரு அழகான வாசிப்பனுபவத்தை பெறுவீர்கள்.
(விலை : ரூ 170)
(விஜயா பதிப்பகம்)
Comments
Post a Comment