என் பழைய பனை ஓலைகள்(வைரமுத்து)

_________________________
என் பழைய பனை ஓலைகள்
(வைரமுத்து)
_________________________
     கவிஞர் அவர்கள் கல்லூரி நாட்களில் எழுதிய சிறந்த கவிதைகளின் தொகுப்பு இந்நூல்!
     கவிஞரின் இன்றைய வளர்ச்சிக்கு எவ்வளவு பெரிய அஸ்திவாரம் இருந்திருக்கிறது என்பது இந்நூலைப் படிக்கும்போது தெரியும்!
    இக்கவிச்சோலையில் உள்ள பூக்கள் மலர்ந்து மணம் பரப்பும்!
மனதை மயக்கும்!
_______________
    அமைதி
_______________
"கண்ணிலே காட்சி தேக்கம்! 
   கரும்பிலே சாற்றின் தேக்கம்! 
விண்ணிலே முகிலின் தேக்கம்! 
    வேதனை நெஞ்சில் தேக்கம்!
மண்ணிலே கடலின் தேக்கம்!
    மனிதரில் வஞ்சம் தேக்கம்!
என்னுள்ளே துன்பம் தேக்கம்!
   எங்குதான் அமைதி தேக்கம்! 
__________________
    "ஆசிரியர் "
__________________
அடுத்ததொரு புவிபடைத்தால் ஆண்டவனே!
ஆளுகின்றோர்
ஆசிரியராய் இருக்க வேண்டும்!
கொடுத்தவரை மதிக்காத கோணல்மதிச் சமுதாயக் கொள்கைக்கே உயிர் வருமோ மீண்டும்! "📚
       (பாரதி பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்