தண்ணீர் தேசம்(கவிப்பேரரசு வைரமுத்து)

____________________________
தண்ணீர் தேசம்
(கவிப்பேரரசு வைரமுத்து)
____________________________
      இது உவமைகளின் தேசம். 
கற்பனை நதிகள் பல கலந்த தேசம்.
வாழ்க்கையின் நியாய அநியாயங்களை வேரறுத்த தேசம்.
ஆக்ஸிஜனுடன் நம்பிக்கையையும் சுவாசித்தால் மரணத்தையும் வென்று விடலாம் என்றும், 
அனுபவங்களின் தொகுப்புதான் வாழ்க்கை என்றும் பாடம் நடத்திய தேசம்.
      நட்புக்கு 100 சதவிகித அர்த்தம் சொல்லும் நேசங்கள் வாழ்ந்த தேசம்.
பல அறியாத அறிவியல் புதிர்களை அழகிய தமிழில் மொழி பெயர்த்த தேசம்.
       கடலை பலவாறு விவரித்து வியந்த தேசம்.
"கடல் அது ஒரு தனி உலகம்.
பள்ளி கொண்ட விஸ்வரூபம்..
கவிஞர்களின் கனா..
முத்துகளின் கர்ப்பப்பை..
பவளங்களின் தொட்டில்..
கலங்கள் நகரும் திரவத்திடல்..
விஞ்ஞானிகளின் ஆய்வுக்கூடம்..
ஞானிகளின் தத்துவம்..
அடுத்த நூற்றாண்டு உணவுத்தேவையின் அமுதசுரபி ..
இது வியப்பின் விலாசம்..
பூமாதேவியின் திரவச்சேலை.."
      மொத்தத்தில் தமிழில் ஒரு விஞ்ஞானக் காவியம்..
        வாசிப்பை நேசிக்கச் செய்ய வைக்கும் மந்திரம் இந்நூல்..
                   (விலை : ரூ 130)
                   (கிழக்கு பதிப்பகம்)





நட்புடன்..
சு.வளர்நிலா..

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்