மாங்கனி(கவிஞர் கண்ணதாசன்)
________________________________
மாங்கனி
(கவிஞர் கண்ணதாசன்)
________________________________
1954 இல் கவிஞர் எழுதிய குறுங்காவியம்.காவியத்தின் கதை கரு வரலாற்றுச் சான்றினை ஆதாரமாகக் கொண்டது.40 தலைப்புகளில் இக்கவிதைக் காப்பியத்தை இயற்றியுள்ளார்.
மாங்கனி நாயகி, அடலேறு நாயகன்.
பல தலைமுறைகளுக்கு முன்னால் இருந்த மக்களின் உள்ளங்களில் பதிந்த, வரலாற்று நிகழ்வுகளை தம்முடைய படைப்புக்கு ஆதாரமாக்கியுள்ளார் கவிஞர்.அந்த நிகழ்ச்சி காதலின் மாண்பினை விளக்கும் கதையானதால் சிறப்பு பெறுகிறது.
கவிதைகள் வெறும் பொழுதுபோக்கிற்காக அல்லாமல் வாழ்வை செம்மை படுத்தவே என்று "மாங்கனி " உணர்த்துகிறது.சிறப்புமிக்க உவமைகள் காணக் கிடக்கின்றன.சுமார் 108 உவமைகளை இந்நூலில் காணலாம்.
தமிழ்மொழியின் மேன்மையைச் சொல்லுதல், அழகியல் உணர்வுகளை வெளிப்படுத்துதல், காதல், கற்பு இவற்றின் உயர்வு, நாட்டுப்புறப் பாடல்களின் செல்வாக்கு என "மாங்கனி "பல பரிமாணங்களைக் கொண்டு புனையப்பட்டுள்ளது.
(விலை : ரூ 60)
(கண்ணதாசன் பதிப்பகம்)
Comments
Post a Comment