(எண்டமூரி வீரேந்திரநாத்)தமிழில்...கௌரி பிரபாகரன்)
_______________________________
(எண்டமூரி வீரேந்திரநாத்)
தமிழில்...கௌரி பிரபாகரன்)
________________________________
பிரபல தெலுங்கு வாரப் பத்திரிகையில் தொடர் கதையாக வெளிவந்து, பிறகு நாவலாக வெளிவந்த நூல் இது.
கதாநாயகன் பிரஹஸித் டென்னீஸ் விளையாட்டு வீரன்.அவனால் நேசிக்கப்பட்ட பெண் லட்சுமி ..திருமணமானவள்.. வாழ்க்கையில் வெறுமை..பொங்கி வரும் எழுத்தார்வம் அவளைப் படைப்பாளியாக்குகிறது.
ஆண்டாண்டு காலமாய்ப் பழக்க ரீதியில் பின்பற்றி வந்த நெறிமுறைகள், கோட்பாடுகள் ஒதுக்கித் தள்ளப்படுவதை இப்புதினத்தில் காணலாம்.
பத்திரிகை துறையில் ஈடுபாடு கொண்ட மதுரா, மநோவசியத்தின் பெயரில் மக்களை ஏமாற்றும் ராஜீ, தண்டனைக்குச் சிக்காமல் திறமையாகக் குற்றங்களைச் செய்து வரும் டாக்டர் விசால், அநியாயத்தை எதிர்த்துப் போராடி கால்களை இழந்த லாயர் சிவசங்கரன் இவர்கள் முற்றிலும் கற்பனைப் பாத்திரங்கள் அல்ல.
குடும்ப வாழ்க்கையில் வெறுமை குடிபுகுந்தால், அதைப் போக்கிக் கொள்ள கணவனுக்கும், மனைவிக்கும் இடையே பேச்சு என்ற பாலம் இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் புதினம்.
(விலை : ரூ 155)
(அல்லயன்ஸ் பதிப்பகம்)
நட்புடன்..
சு.வளர்நிலா..
Comments
Post a Comment