இடக்கை(எஸ்.ராமகிருஷ்ணன்)

___________________________________
இடக்கை
(எஸ்.ராமகிருஷ்ணன்)
____________________________________
         17 ஆம் நூற்றாண்டில் நீதி மறுக்கப்பட்டவர்களின் வரலாற்றை சமகால வரலாற்றுடன் ஒப்பீடு செய்யப்பட்டு எழுதப்பட்ட புதினம்.
       இப்புதினத்தில் 45 அங்கங்கள்..ஒவ்வொன்றிலும் பல கதைகள் ..உபகதைகள்...
அவற்றில் சில வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஒன்றிணைகின்றன.சில முடிச்சவிழாத புதிர்களாகி விடுகின்றன.அக்கதைகள் ஊடாக வாழ்க்கைத்துவம் மிளிர்கிறது.
       இப்புதினத்தில் எஸ்.ரா அவர்கள் 2 பக்கங்ளை சித்தரிக்கிறார்.மன்னர் பரம்பரைக்குள் நிகழும் காட்சிகள் ..சதிகள், ஆணவம், அதிகார மமதை, சந்தேகப்படும் இயல்பு..
மறுபுறத்தில்அடிமை நிலை மக்களின் இயல்புகள், அவர்களின் அறியாமை, தனிமை, இயலாமை, ஏழ்மை, ஏமாற்றம், துன்பம்...
        நூற்றுக்கணக்கான பாத்திரங்கள் இருப்பினும் ஔரங்கசீப்பின் அந்தரங்கப் பணிப்பெண்களில் ஒருத்தியான "அஜ்யா பேகம் " என்ற அரவாணியும், கைதியாக தண்டனை அனுபவித்து தப்பி ஓடும் "தூமக்கேது " வும் அந்நியன் "ரெமியல் " ஆகியோருடன் பாதுஷாவும் முழுப் பாத்திரங்களாகி விடுகின்றனர்.
        முக்கியமாக அஜ்யா பேகத்தை மிகச்சிறந்த கதாப்பாத்திரமாக எஸ்.ரா உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
               (விலை : ரூ 375)
               (தேசாந்திரி பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்