கியூபா : கல்விக்கு ஒரு கலங்கரை விளக்கம்(தியாகு)

_________________________________
கியூபா : கல்விக்கு ஒரு கலங்கரை விளக்கம்
(தியாகு)
__________________________________
      கியூபாவில் கல்வி என்பது பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அடிப்படை உரிமை.இங்கு உயர் படிப்பு வரையிலும் அரசாங்கத்திற்கே முழுப் பொறுப்பு.
       கியூபாவின் வீரத்தலைவர்கள் பிடல்காஸ்ட்ரோ, செகுவாரா தலைமையில் அந்நாட்டின் புரட்சிக்கொடி ஏற்றப்பட்ட மூன்றே ஆண்டுகளில் அனைவருக்கும் கல்வி என்ற இலக்கு எட்டப்பட்டது.
        மாணவரும், படித்த இளைஞர்களும் பட்டி, தொட்டி, காடு, மலை, வயல் என நாட்டின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்று எழுத்தறிவு பணிமேற்கொண்டு இந்த இலக்கு எட்டப்பட்டது.
         அனைவருக்கும் கல்வி இலவசம், அறிவியலோடு அறவியலையும் புகட்டும் தரமான கல்வி, உயிர் காக்கும் மருத்துவக் கல்வி, சிறந்த ஆசிரியப் பயிற்சி... கல்வித் துறையில் இப்படி ஒவ்வொரு வகையிலும் கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது கியூபா.
      கியூபாவின் கல்விப் புரட்சியினை விவரிக்கும் இந்நூல் காலத்தின் கட்டாயம். 
கியூபாவைப் படிப்போம்!
அதன் படிப்பைப் படிப்போம்!
கியூபாவால் முடியும் என்றால் நம்மாலும் முடியும்...
"தெரிந்தால் கற்றுக் கொடுங்கள்!
தெரியாவிட்டால் கற்றுக் கொள்ளுங்கள்!! "
             (விலை : ரூ 40)
    (நீயூ செஞ்சுரி புக் ஹவுஸ்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்