கருவாச்சி காவியம்(வைரமுத்து)
_________________________
கருவாச்சி காவியம்
(வைரமுத்து)
_________________________
கருவாச்சியின் கணவன் திருமணமான ஆறே நாளில் அவளை விலக்கி வைக்க பஞ்சாயத்தைக் கூட்டுகிறான்!
விலக்கி வைக்கப்பட்ட அவள் குழந்தையைப் பெற்று வாழ்க்கையில் ஒவ்வொரு படியிலும் அடிபட்டு, கடைசியில் தான் பிறந்த மண்ணின் மக்களுக்கு உதவுகிறாள் என்பதே கதைக் கரு!
அனுபவம் ஒரு பெண்ணை எப்படி எல்லாம் பக்குவப்படுத்துகிறது என்பதை அழகாகச் சொல்கிறார் ஆசிரியர்!
ஊர்ப்புறங்களில் நடக்கும் சடங்குகள், அவர்களின் நம்பிக்கைகள், வைராக்கியம், பழி வாங்கும் உணர்வு, நேசம், இயலாமை, அறியாமை போன்ற பல செய்திகளை இலாவகமாகச் சொல்லிச் செல்கிறார் கவிஞர்!
இந்நூலை படித்து முடிக்கும் வரையில் தேனி மாவட்டத்தில் ஏதேனும் ஒரு கிராமத்தில் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்
சொல்லோவியம்!
" கருவாச்சி காவியம் "
(விலை : ரூ 270)
(சூர்யா பதிப்பகம்)
Comments
Post a Comment