எம்மொழி செம்மொழி - கவிக்கோ அப்துல் ரகுமான்
____________________________________
எம்மொழி செம்மொழி
(கவிக்கோ அப்துல் ரகுமான்)
____________________________________
தமிழ்மொழியின் புகழ்பாடும் நூல் இது!
எம்மொழிக்கும் மூத்தவளே!
எம்மொழியாய் வாய்த்தவளே!
செம்மொழியாய் மொழிகளுக்குள் செம்மாந்து இருப்பவளே!
நயந்த மொழிகள் நாலாயிரம் இருந்தும் உயர்ந்தவளே!
உன்னைப்போல் உயிர்மெய்யோடு இருப்பவர் யார்?
வாயின் சுவாசமே!
வைதாலும் தித்திக்கும் காயாத கனிச்சுவையே!
காதருந்தும் கள்ளே!
எம் மொழி செம்மொழி எனக் கேட்டால்,
எம்மொழி செம்மொழி எனச் சொல்லும் புகழ் கொடுத்தாய்!
அகம் நீ! புறம் நீ!என் ஆருயிரும் நீ!
எங்கள் முகம் நீ! முகவரி நீ!
முடியாத புகழும் நீ!!
வாசிப்பவரை வசியப்படுத்தி, வயப்படுத்தும் எழுத்துக்குச் சொந்தக்காரர் "கவிக்கோ "!
(விலை _ ரூ 200 )
(யுனிவர்சல் பப்ளிஷர்ஸ்)
Comments
Post a Comment