தூக்கு தண்டனை(எண்டமூரி வீரேந்திரநாத்)தமிழில்..கௌரி கிருபானந்தன்
__________________________________
தூக்கு தண்டனை
(எண்டமூரி வீரேந்திரநாத்)
தமிழில்..கௌரி கிருபானந்தன்
___________________________________
தன்னுடைய அபார எழுத்தாற்றலால் புத்தகத்தை படிக்க கையில் எடுத்தவர் கீழே வைக்க மனமில்லாத அளவுக்கு படிப்பவர் மனதில் திகைப்பை ஏற்படும் வகையில் எழுதுவதில் வல்லவர்.
சிரஞ்சீவியின் வேடிக்கைத்தனமான பேச்சுகளையும், செய்கைகளையும் விளக்கும் ஆசிரியர், அவன் தூக்குக் கயிற்றிலிருந்து விடுபடும் வரை - கதையை மின்னல் வேகத்தில் கொண்டு செல்வது அருமை.
அதன்பின் கால் பாகம்.. என்ன இருக்கும் என்று நினைத்தால் கதை விமான வேகத்தில் பறக்கிறது . ஆசிரியரின் படைப்புலகில் மற்றும் ஒரு பிரமாண்டம்.
விஞ்ஞானச் வளர்ச்சி அடைந்தவிட்ட காலத்திலும் ஆகாயவிமானம் பறப்பதை அதிசயத்துடன்தான் மக்கள் பார்க்கிறார்கள்.அதுபோல எழுத்துலகம் எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும் எண்டமூரி வீரேந்திரநாத் போன்ற எழுத்தாளர்களைப் பார்த்து அதிசயத்துக் கொண்டுதான் உள்ளது.
(விலை : ரூ 170)
(அல்லயன்ஸ் கம்பெனி)
Comments
Post a Comment