மூன்றாம் உலகப்போர் - வைரமுத்து
_________________________
மூன்றாம் உலகப்போர்
(வைரமுத்து)
________________________
மனிதகுல நகர்வுக்கு போர் அவசியம் என்றே மானிடவியல் கருதுகிறது!
இப்போதும் ஒரு போர் தொடங்கி நிகழ்ந்து கொண்டே இருக்கிறது, தன் வடிவத்தை மாற்றிக்கொண்டு!
இது முகத்துக்கு முகம்பார்த்து மோதாத போர்! மண்ணுக்கும் விண்ணுக்குமான போர்! மனிதனுக்கும் இயற்கைக்குமான போர்!
புவி வெப்பமயமாதல் என்ற பூதம் தலைவழியாகவும், உலகமயமாதல் என்ற பூதம் கால் வழியாகவும் ஒரே நேரத்தில் விழுங்கிக் கொண்டே வருகின்றன விவசாயியை!
இந்த இரு சக்திகளும் வேளாண்மைக்கு எதிராகத் தொடுத்திருக்கும் போர்!
இந்தப்போரில் இயற்கையை எதிர்த்து மனிதன் வென்றாலும், மனிதனை எதிர்த்து இயற்கை வென்றாலும் தோற்பதென்னவோ மனிதன்தான் !
மண்ணில் முளைத்த மனிதர்கள், உணர்ச்சியில் ஊறிய மொழி, சத்தியத்தில் நிகழும் சம்பவங்கள், அனுமதிக்கப்பட்ட எல்லைக் கோட்டுக்குள் நிகழும் கற்பனை, நாங்கள் நடந்து பழகிய பூகோளம், எல்லோரும் அறிந்த, ஆனால் எழுதப்படாத எளியவர்களின் சரித்திரம் இவற்றின் கூட்டுத்தொகைதான் இந்நூல்!
இந்தப் படைப்பில் புண்ணில் ஒழுகும் ரத்தமும், கண்ணில் வழியும் கண்ணீரும் இரவல் உணர்ச்சியல்ல! பெரிதும் எங்கள் உணர்ச்சி!
விவசாயத்தின் வீழ்ச்சி குறித்து ஐ.நா வில் விவாதிக்க வேண்டும்!
வேளாண்மையைக் காப்பது உலகக் கடமை! அந்த உலகக் கடமையின் தமிழ்ப் பங்குதான் இந்நூல்!! 🌧🌧🌱🌿🍀🌴🌳📚
Comments
Post a Comment