சதுரங்கக் குதிரைகள் - நாஞ்சில் நாடன்
___________________________________
சதுரங்கக் குதிரைகள்
(நாஞ்சில் நாடன்)
___________________________________
சதுரங்கத்தில் குதிரைகள் மிக முக்கிய பங்கு வகிப்பதை வைத்து இந்தப் பெயரை வைத்தாரா அல்லது இலக்குகள் இல்லாமல் இங்கும் அங்கும் தாவுவதைக் குறிக்க இத்தலைப்பை வைத்தாரா தெரியவில்லை..
திருமணமாகாத.. உறவுகளோடு ஒட்டாத.. சொந்த ஊர்ப்பக்கம் ஒதுங்காத.. தாய் தந்தை இழந்த நாராயணன் பரிதாபத்திற்குரியவன்.
கதை முழுக்க மும்பை, மகாராஷ்டிரா பக்கம் நடக்கிறது.பிளாஷ்பேக் நாகர்கோவில் வந்து போகிறது.
புதினம் முழுவதும் தனிமை.. உறவுகள் தூரம் போகும் வெறுமை.. விதவையை மறுமணம் செய்யவோ, விவாகரத்து செய்த பெண்ணை மணக்க மனம் வராத கொடுமை .. அனுசரணையான அலுவலக சகாக்கள் என்று போகிறது கதை..
புதினத்தின் காட்சிகள் கண்முன் விரிபவை..நல்லதொரு வாசிப்பனுபவத்தை தரும் நூல் இது..
(விலை : ரூ 120)
(விஜயா பதிப்பகம்)
Comments
Post a Comment