வந்தார்கள் வென்றார்கள் - மதன்

_________________________________
வந்தார்கள் வென்றார்கள்
(மதன்)
__________________________________
       தைமூரின் படையெடுப்பில் தொடங்குகிறது இந்நூல்.
      பதினேழு முறை இந்தியாவிற்குள் படை எடுத்த கஜினியிலிருந்து, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பகதூர்ஷா வரை.. சொல்லப்பட்ட இந்த  வரலாற்றுத் தொடரில் சூடு, சுவை, கோபம், கொந்தளிப்பு என்று நிஜங்களின் ஊர்வலம்..
வாசிப்பவரை சிலிர்க்க வைப்பது நிஜம்..
       ஒவ்வொரு மன்னரையும் நேசித்து, ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அவரே நேரில் இருந்து பார்த்தது போல எழுதிய பாங்கு அதிசயமானது.
        வரலாற்றை.. எளிமையாகவும், ஆழமாகவும் சொல்லமுடியும் என்று உணர்த்திய புத்தகம்.
      "மனிதன் மாறினாலும், மனம் எங்கே மாறுகிறது " என்று நுட்பமாக மதனால் மட்டுமே எழுத முடியுமோ என நினைக்க வைக்கும் நடையழகு அருமை.
       235 ஆண்டு வரலாற்றை, 280 பக்கங்களில் எழுத முடியுமா? என்ற கேள்விக்கு "ஆம் " என்ற பதிலைத் தருகிறது இந்நூல்.
                 (விலை : ரூ 330)    
                 (விகடன் பிரசுரம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்