ஹெலன் கெல்லர் - க.சாந்தகுமாரி

_______________________________
ஹெலன் கெல்லர்
(க.சாந்தகுமாரி)
_______________________________
      வட அலபாவில் "டஸ்கும்பியா " நகரில் 1880 ஹெலன் கெல்லர் பிறந்தார்.அழகாகப் பிறந்தாலும் ஒன்றரை வயதில் ஏற்பட்ட கொடிய நோயின் காரணமாக கண்பார்வையையும், பேச்சுத் திறனையும் இழந்துவிட்டார்.
       ஸல்லியன் அவருடைய ஆசிரியர்.ஒவ்வொரு விஷயத்தையும் ஹெலன் சிறப்பாக செய்து முடிக்கத் துணை நின்றார் .12 வயதிலேயே கதை எழுதும் அளவுக்கு ஆற்றலை வளர்த்து விட்டவர் ஸல்லியன்.
       ஹெலனுக்கு ஜெர்மானிய இலக்கியங்களில் நிறைய ஈடுபாடு உண்டு.ஹெலன் அவருடைய வாழ்க்கையைப் பற்றி எழுதிய "என் கதை " புத்தகத்தை தயார் செய்ய "ஜான்மேஸி " என்ற பேராசிரியர் உதவினார்.
       முயற்சி திருவினையாக்கும் என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கு நல்லதோர் எடுத்துக்காட்டு இவரின் கதை.
       அன்னாரின் வாழ்க்கைச் சுருக்கத்தை அனைத்துதரப்பினரும் வாசிக்கும் வகையில் அழகிய தமிழில், எளிய நடையில் எழுதியுள்ளார் ஆசிரியர். மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும் நூல்களில் சிறப்புமிக்க நூல் இது.
                 (விலை : ரூ 60)
                 (மங்கை வெளியீடு)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்