சிதம்பர நினைவுகள் - பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, தமிழில்...கே.வி.ஷைலஜா

______________________________________
சிதம்பர நினைவுகள்
(பாலச்சந்திரன் சுள்ளிக்காடு)
தமிழில்...கே.வி.ஷைலஜா
______________________________________
        இது ஒரு கவிதை நூல் அல்ல. கவிதையைப் போல் வாழ்ந்த கவிஞனின் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்வுகள். 
       தம் மனதில் ஏற்பட்ட காயங்கள்.. வடுக்கள் .. அகற்ற முடியாத அவமானங்கள்..சறுக்கல்கள் .. முதலியவற்றை மனம் திறந்துக் கூறுகிறார்.
      வாசிப்பவர்களுக்கு மொழிபெயர்ப்பு நூல் என்ற உணர்வு ஏற்படாமல் மூலநூலைப் படிப்பதைப் போன்ற உணர்வு ஏற்படும் வகையில் எளிய, இனிய தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார் ஷைலஜா அவர்கள்.
       "வாழ்வில் சில நினைவுகள் மங்கி மறைந்து போகாமல் மனதில் மீண்டும் மீண்டும் அலை மோதிக் கொண்டிருக்கின்றன. அந்த நிகழ்வுகளை வார்த்தைகளில் கோர்த்துப் பார்க்கத் தோன்றியது. அப்படி உருவானதுதான் இந்த வாழ்க்கைக் குறிப்புகள் " என்று ஆசிரியரே (பாலச்சந்திரன் சுள்ளிக்காடு) கூறியுள்ளார்.
                  (விலை : ரூ 150)
                  (வம்சி புக்ஸ்) 
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்..
                         - பாரதியார்

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்