மலர் மஞ்சம் - தி.ஜானகிராமன்

_______________________________
மலர் மஞ்சம்
(தி.ஜானகிராமன்)
_______________________________
         ராமையாவின் நான்காவது மனைவி பெண்ணைப் பெற்றவுடன் மாப்பிள்ளையையும் நிச்சயித்து விட்டு மரணிக்கிறாள்.ராமையா அந்தப்பெண் பாலாம்பா (பாலி)யை, சொர்ணாக்கா மகன் தங்கராசுக்குத் திருமணம் செய்து வைக்க மேற்கொள்ளும் முயற்சியே கதை.
       நடுவில் வக்கீல் பேரன் ராஜாவால் பாலிக்கு வரும் சஞ்சலம் எப்படி தீந்தது என்பதை அலுப்பு தட்டாத வகையில் சொல்லி இருக்கிறார் தி.ஜா அவர்கள்.
       ராஜாங்காடு என்னும் கிராமத்தில் ஆரம்பிக்கும் கதை, தஞ்சாவூர் சென்று, சென்னை சென்று, காசியில் முடிவடைகிறது.
       கோணவாய் நாயக்கர், வக்கீல், நாயக்கர் மகன், பெரியசாமி, செல்லம்மா என அனைத்துப் பாத்திரங்களையும் படிப்பவர் மனதில் தக்க வைத்துவிடுவார் தி.ஜா.
       ஆசிரியரின் நூல்கள் அனைவருக்கும் பிடிப்பதற்கு, அவரின் உரையாடல்களும், பாத்திர அமைப்பும், அப்பாத்திரங்களை வாசிப்பவர் மனதில் நடமாட விடுதலும் காரணமாக அமையலாம்..
               (விலை : ரூ 270)
               (ஐந்திணை பதிப்பகம்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்