முல்லைக்காடு - பாவேந்தர் பாரதிதாசன்
________________________________
முல்லைக்காடு
(பாவேந்தர் பாரதிதாசன்)
_________________________________
இயற்கைப் பகுதி, தமிழகப் பகுதி, காதற் பகுதி, நகைச்சுவை பகுதி, சிறுவர் பகுதி என 5 பகுதிகளைக் கொண்டது இந்நூல். சுமார் 30 கவிதைகளைக் கொண்டது.
சோலை ..
______________
வானவில் ஏந்தல் கண்டு
மாந்தளிர் மெய் சிவக்கத்,
தேனுந்தும் மலர்க் குலங்கள்
செம்மக ரந்தம் தூவ,
ஆனந்தத் தென்றல் மெல்ல
ஆலவட்டம் பிடிக்க
வானவில் மறைய, மாலை
மல்லிகை சிரிக்கும் சோலை...
மாணவர்க்கு எழுச்சி...
_________________________
கற்பதில் முதன்மை கொள்!
காண்பதைத் தெரிந்து கொள்!
எப்பொழுதும் மெய்யுரைக்க அஞ்சாதே....
அருமையான கவிதைகள் நிறைந்த அற்புதமானக் காடு..புரட்சிக்கவிஞரின் முல்லைக்காடு..
வாசிப்பீர்! இலக்கிய சுவை உணர்வீர்!
(விலை : ரூ 15)
(நாம் தமிழர் பதிப்பகம்)
Comments
Post a Comment