கடல் புரத்தில் - வண்ணநிலவன்
________________________________
கடல் புரத்தில்
(வண்ணநிலவன்)
________________________________
நூற்றிற்கும் அதிகமான பக்கங்களில் விரல் பிடித்து நெய்தல் நில மக்களோடு பழக வைத்துவிட்டார் ஆசிரியர்.
கடல்புரத்து மக்களின் வாழ்வை குரூஸ் மிக்கேல், மரியம்மை, அமலோற்பவம், பிலோமி பாத்திரங்களின் வழியே பதிவு செய்கிறார்.
துரோகம், வஞ்சம், தொழில் போட்டி இவைகளை எல்லாம் மீறி அவர்களுக்கிடையே அனைவரையும் ஒருங்கிணைக்கும் அன்பிருக்கிறது. சொல்லப்படாமல் அவர்களுக்குள்ளே பிரியம் வெளிப்படும் தருணங்கள் பெருமூச்சு விடச்செய்யும்.
"கடல் புரத்தில் "நடந்து வந்தபின் (வாசித்து முடித்த பின்) காலிடுக்குகளில் இருக்கும் மணல் துகள்களை அவ்வளவு எளிதில் உதற மனம் வருவதில்லை.
(விலை : ரூ 110)
(கிழக்கு பதிப்பகம்)
Comments
Post a Comment