பாட்டு பிறக்குமடா - வாணிதாசன்
_______________________________
பாட்டு பிறக்குமடா
(வாணிதாசன்)
________________________________
இந்நூலில் இடம் பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் இசைப்பாடல்கள்.73 பாடல்கள் உள்ள கவிதைக்களஞ்சியம்.
"பாரதிதாசனின் பெயரை உரைத்திட பாட்டு பிறக்குமடா " என்ற எடுப்பில் ஆசிரியரிடம் அவர் கொண்ட அன்பின் பெருக்கை நாம் உணர முடியும்.
எளிய நிகழ்ச்சிகளையும், காட்சிகளையும் படம்பிடித்து ..உயிர் அளித்து ..மகிழ்ச்சிக்குரிய வனப்புடையதாக்கி உள்ளார்.
"கட்டை சிறுதிண்ணை மீதமர்ந்தே
என் கருத்தெல்லாம் உன்பால் செலுத்திவிட்டே!
பட்டுடல் பூனையின் மெய்வருடி கூரை
பாய்ந்து வரும் அணில் பார்ப்பேன்!"
என்னே! இயற்கை வர்ணிப்பு...
"வாழப்பொருள் தேவை அறிவிலார் நீதி..
பொன்னல்ல வாழ்க்கைக்கு வேண்டியது ; உள்ளம்.."
என வரும் அடிகள்
"ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை அரிதரோ சென்ற இளமை தரற்கு " என்னும் கலித்தொகைப் பாடலை நினைவூட்டும்.
அகமும் புறமும் இந்நூல் முழுவதும் வெற்றி நடை போட்டுச் செல்லும்.படியுங்கள்! பயனுறுங்கள்!
Comments
Post a Comment