சுமித்ரா - மலையாளம் : கல்பட்டா நாராயணன் - தமிழில்...கே.வி.ஷைலஜா

_________________________________
சுமித்ரா
(மலையாளம் : கல்பட்டா நாராயணன்)
தமிழில்...கே.வி.ஷைலஜா
__________________________________
      மலையாளத்தில் "இத்ரமாத்திரம் " என்ற இவரது புதினம் தமிழில் "சுமித்ரா " என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
      சுமித்ரா இறந்துவிட்டாள். இந்த ஒற்றை வரி தான் மொத்தப் புதினமும்.இந்த ஒற்றை வரிக்குப் பின்னால் ஒரு பெண்ணின் முழு வாழ்க்கையும் அடங்கியுள்ளது.
      சுமித்ராவின் கணவன், மகள், தோழியர் கீதா சுபைதா, அப்பு, மரியா, தாசன், மாதவி ..என்று அவளுடன் பழகியவர்கள், அவளது அன்பைப் புரிந்து கொண்டவர்கள், அவளைப் புரிந்து கொள்ளத் தவறியவர்கள், அவளது மரணத்தின்மூலம் தன்னை உணர்ந்து கொண்டவர்கள் .. பலரது நினைவுகளில் அன்று சுமித்ரா வந்து செல்கிறாள் .
      புதினத்தின் முடிவில் கல்பட்டா நாராயணன் கூறுகிறார் "மரணத்தின் சந்நிதியில் அதிக நேரம் நிற்பதற்கான திராணி மனிதர்களிடம் குறைந்து கொண்டே வருகிறது ." இது நிதர்சனமான உளவியல் உண்மை.
       வாசிப்பவர்கள் கல்பட்டாவின் கவித்துவமான வரிகளில் கரைந்துதான் போவார்கள்.வாசிக்கும் போது காப்பி பூக்களின் மணத்தையும், வயநாட்டின் குளிரையும் உணர்வார்கள்.
                 (விலை : ரூ 100)
                 (வம்சி புக்ஸ்)

Comments

Popular posts from this blog

யுகபாரதி கவிதைகள் - யுகபாரதி

கறுப்பு மலர்கள் - நா.காமராசன்

தமிழ்ப் பழமொழிகள் - கி.வா.ஜகநாதன்